மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. 'கூர்க்கா, மண்டேலா' ஆகிய படங்களில் தனி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கொரானோவுக்கு முன்பாக யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த சில படங்களை அவர் கதாநாயகனாக நடித்துள்ளது போல சிலர் விளம்பரப்படுத்தி அந்தப் படங்களை வெளியிட முயற்சித்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் 'தாதா' என்ற படத்தை யோகி பாபு நடிக்கும் 'தாதா' படம் என விளம்பரப்படுத்தி படத்தை டிசம்பர் 9ம் தேதி வெளியிடப் போவதாகவும் அறிவித்திருந்தார்கள். அந்த போஸ்டரைப் பகிர்ந்து யோகி பாபு, “இந்தப் படத்துல நான் ஹீரோ இல்லை. நிதின் சத்யா ஹீரோ, அவர் நண்பனா நான் பண்ணியிருக்கேன், நான் ஹீரோ இல்ல, மக்களே, நம்பாதீங்க,” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த வருடம் யோகி பாபு நடித்து இதுவரை பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துள்ளன. அடுத்த வருடம் அவர் நடித்து அதைவிட அதிகமான படங்கள் வரும் எனத் தெரிகிறது. நகைச்சுவை கதாபாத்திரங்களைத் தவிர சில படங்களில் தனி கதாநாயகனாகவும் யோகி பாபு நடித்து வருகிறார்.