தமிழுக்கு வருகிறார் ஜான்வி கபூர் | புதிய பிராண்ட் கார் வாங்கிய சீரியல் நடிகை வைஷாலி தனிகா! | ரஜினிக்கு எழுதிய கதையை சூர்யாவுக்காக திருத்தம் செய்த கார்த்திக் சுப்பராஜ்! | சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! | வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் |
'புது நெல்லு புது நாத்து' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுகன்யா. அதற்குப் பின் “சின்னக் கவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ்ப் பாட்டு, சோலையம்மா, சின்ன மாப்ளே, வால்டர் வெற்றிவேல், கேப்டன், சீமான், மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ், இந்தியன்” என பல வெற்றிப் படங்களில் நடித்தவர். 90களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்கியவர். தமிழைத் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்தவர். பத்துக்கும் மேற்பட்ட டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.
சில வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு நவம்பர் 25ம் தேதி தன்னுடைய 50வது பிறந்தநாளை லண்டனில் கேக் வெட்டிக் கொண்டாடியிருக்கிறார். அந்த வீடியோவையும், புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். “எனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் எனது 50வது பிறந்தநாளை லண்டனில் நவம்பர் 25ம் தேதி கொண்டாடியது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. எனது நலம்விரும்பிகளின் அன்பிற்கு மிகவும் நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.