பிளாஷ்பேக்: விஜய் படத்தை நிராகரித்த அஜித் | ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! |
அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி ராமர் திருக்கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு பிரபல நடிகையும் நடனக் கலைஞருமான சுகன்யா 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற பாடலை எழுதி, இசையமைத்து பாடியுள்ளார். பக்தி ரசம் சொட்டும் வகையில் அமைந்துள்ள இந்த பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் பாடும் வகையில் அமைந்துள்ளது. ஆடியோ வடிவில் முதலில் வெளியிடப்பட உள்ள 'ஜெய் ஸ்ரீ ராம்' பாடல் விரைவில் வீடியோவாகவும் வெளியாக உள்ளது.
பாடலின் வரிகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட உள்ளன. இப்பாடலின் இசை ஒருங்கிணைப்பை சி. சத்யா திறம்பட செய்துள்ளார். பாடலின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பாடல் குறித்து பேசிய நடிகை சுகன்யா, "500 ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ள நிலையில் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவில் கட்டுமான பணிகள் தொடங்கியபோது என் நெற்றியில் நான் வரைந்த ஸ்ரீ ராமர் ஓவியம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு பெற்றது. தற்போது கோவில் திறப்பு விழா நடைபெற உள்ள வேளையில் என்னுடைய சிறு பங்களிப்பாக இந்த பாடலை சமர்பிக்கிறேன். ஸ்ரீ ராமரின் நாம மகிமை, அவரது பராக்கிரமம், ராமாயண சுருக்கம் மற்றும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள கோவிலை நாமும் காணும் பாக்கியம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது," என்றார்.