பிளாஷ்பேக்: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஈடுகட்டிய என்.எஸ்.கிருஷ்ணன் | பிளாஷ்பேக்: விஜய் படத்தை நிராகரித்த அஜித் | ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! |
பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் அறிமுகமானவர் சுகன்யா. அதன்பிறகு கமல், விஜயகாந்த், கார்த்திக், சத்யராஜ் என பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். சமீபகாலமாக அவ்வப்போது சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வரும் சுகன்யா, தற்போது டிஎன்ஏ என்ற ஒரு மலையாள படத்தில் இடம்பெற்றுள்ள தமிழ் சூழலுக்கான ஒரு பாடலை எழுதி, பாடல் ஆசிரியராக அறிமுகம் ஆகியிருக்கிறார். சுரேஷ் பாபு என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு, சரத் என்பவர் இசையமைத்துள்ளார்.
இது குறித்து சுகன்யா வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், டிஎன்ஏ என்ற மலையாள படத்தில் நான் எழுதி உள்ள தமிழ் பாடல் விரைவில் வெளி வர உள்ளது. ரொம்ப அருமையான பாடல். இந்த படமும் பாடலும் சூப்பர் ஹிட்டாகும் என்று நினைக்கிறேன். இந்த பாடலை கேட்டதும் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். இந்த பாடல் எழுத வாய்ப்பு அளித்த இயக்குனர், இசையமைப்பாளருக்கு மிக்க நன்றி என தெரிவித்திருக்கிறார்.