மீண்டும் 'டான்' கூட்டணி : புது அப்டேட் | வசூல் சாதனை படைக்குமா 'கல்கி 2898 ஏடி' ? | தனி விமானத்தில் பேச்சுலர் பார்ட்டி நடத்திய எமி ஜாக்சன் | நேசிப்பாயா : ஆகாஷ் முரளி பட டைட்டில் அறிவிப்பு | ஜோடி பொருத்தம் பிரமாதம் : சித்தார்த் - அதிதியை வாழ்த்திய ரேகா | படத்திற்கு படம் எனது வேடத்தில் ஒரு தாக்கத்தை கொடுக்க விரும்புகிறேன் : ஷர்வரி | 4 வருடம் காத்திருந்து தன்மீதே நம்பிக்கை வந்ததும் நடிக்க சம்மதித்த பார்வதி | உன்னி முகுந்தன் படம் மூலம் நடிகராக அறிமுகமாகும் திலகனின் பேரன் | ஐடென்டிடி படப்பிடிப்பை நிறைவு செய்த வினய் ராய் | நாகார்ஜூனாவை தொடர்ந்து தனுஷின் பாடிகார்டும் ரசிகரை தள்ளிவிட்டார் |
கவின் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த டாடா படம் வெற்றி பெற்றது. அடுத்து ஆகஸ்ட் 20ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து அவர் நடிக்கும் ஸ்டார் படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை பியார் பிரேமா காதல் என்ற படத்தை இயக்கிய இளன் இயக்க உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஸ்டார் படத்தின் பிரோமோ வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் கவின் கவிதை ஒன்றை சொல்லி முடித்த பிறகு யுவன் சங்கர் ராஜாவின் குரலில் ஒரு பாடல் ஒலிக்கிறது.