ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
அரசியிலில் தீவிரமாக இருந்தாலும் குஷ்பு எப்போதுமே நடிகையாகத்தான் அதிகமாக பார்க்கப்படுகிறார். இதை அவரும் உணர்ந்து சமூக வலைத்தளங்களில் தன்னை நடிகையாகவே முன்னிறுத்தி வருகிறார். வித்தியாசமான தோற்றங்களில் புகைப்படங்கள் எடுத்து தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு தலைமுடியை குட்டையாக்கியது போன்ற ஹேர் ஸ்டைலில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார்.
இந்த புதிய ஹேர்ஸ்டைல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதற்கு குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியிருப்பதாவது: நான் தலைமுடியை குட்டையாக வெட்டிக் கொண்டதாக நினைத்து நிறைய பேர் எனக்கு குறுந்தகவல்கள் அனுப்பினர். நான் அதை ஒரு போதும் செய்ய மாட்டேன். எனது புதிய படத்தின் தோற்றத்துக்காக அப்படி குட்டையான தலைமுடி வைத்து பார்க்கப்பட்டது. தலைமுடியை ஒருபோதும் வெட்ட மாட்டேன். உங்கள் அன்புக்கு நன்றி. எனது முந்தையை பதிவு உங்களை தவறாக நினைக்க வைத்து இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், என்று எழுதியுள்ளார்.