மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் சுங்கத்துறை கூடுதல் ஆணையாளர் சச்சின் சாவந்த் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். லக்னோவில் சுங்கத்துறை கூடுதல் ஆணையராக இருந்தபோது சச்சின் சாவந்த் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கும் நடிகை நவ்யா நாயருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. நவ்யா நாயரை பார்ப்பதற்காக பலமுறை இவர் கொச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு நகைகள் உள்பட விலை மதிப்புள்ள பொருட்களை பரிசாக கொடுத்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் நவ்யா நாயரிடம் நேற்று மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் விசாரணை நடத்தினர். மும்பையிலுள்ள நவ்யா நாயரின் வீட்டில் இந்த விசாரணை நடைபெற்றது. சச்சின் சாவந்த் தனக்கு நண்பர்தான் என்றும், ஆனால் அவருடன் வேறு விதமான நெருக்கம் எதுவும் கிடையாது என்றும் நவ்யா நாயர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
சச்சின் சாவந்துடனான நெருக்கம் பற்றிய ஆவணம் கிடைத்தால் நவ்யா நாயர் கைது செய்யப்படலாம் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.