ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
நடிகர் எஸ்ஜே சூர்யா முதன்முறையாக வதந்தி என்கிற வெப் தொடரில் நடித்துள்ளார். விக்ரம் வேதா பட புகழ் இரட்டை இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடரை கொலைகாரன் பட இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார். இவர் வாலி, குஷி ஆகிய படங்களில் எஸ்ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த வெப் தொடர் வரும் டிசம்பர் இரண்டாம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. கிட்டத்தட்ட 240 நாடுகளில் உள்ளவர்கள்' இந்தத் தொடரைப் பார்க்க முடியும்.
தற்போது இந்த வெப் தொடரின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் எஸ்ஜே சூர்யா இதுபற்றி பேசும்போது, “ தமிழகத்தை தாண்டி இந்தியாவையும் தாண்டி உலக அளவில் செல்ல வேண்டும் என ஆசைப்பட்டேன். அது இந்த வெப் தொடர் மூலமாக, அதுவும் எனது உதவி இயக்குனர் மூலமாகவே நிறைவேறி இருப்பதில் மகிழ்ச்சி” என்று கூறினார்.
அதுமட்டுமல்ல கடந்த 2018ல் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எஸ்ஜே சூர்யாவுக்கு தேடி வந்தது. எஸ்ஜே சூர்யாவை வைத்து கள்வனின் காதலி என்கிற படத்தை இயக்கிய தமிழ்வாணன் தான் அந்த படத்தை இயக்கினார். தமிழில் உயர்ந்த மனிதன் என்றும் இந்தியில் தேரா யார் ஹூம் மெயின் என்கிற பெயரிலும் இரு மொழிப் படமாக உருவாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.
தற்போது வதந்தி வெப் தொடர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அந்த படம் பற்றியும் வருத்தத்துடன் குறிப்பிட்டு பேசிய எஸ்ஜே சூர்யா, “அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது இந்த சினிமாவிலேயே சாதிக்க முடியாததை சாதித்து விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. பத்து நாட்கள் அவருடன் இணைந்து படப்பிடிப்பிலும் நினைத்தேன். ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. நான் என்னளவில் அந்த படத்தை மீண்டும் துவங்குவதற்கு எவ்வளவு முயற்சித்தும் முடியாமல் போனது. அந்த படம் கைவிடப்பட்டதுபோது நான் கதறி அழுதேன். அந்த படம் மூலமாக உலக அளவில் செல்ல வேண்டும் என்கிற என்னுடைய கனவு நொறுங்கிப் போனது. ஆனால் தற்போது இந்த வதந்தி வெப் தொடர் மூலமாக அது மீண்டும் சாத்தியமாகி உள்ளது” என்று கூறினார்.