பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
அஜித் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா அறிமுக இயக்குனராக இயக்கிய படம் வாலி. அஜித்தின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்ததுடன் எஸ்.ஜே. சூர்யாவுக்கு திரையுலக வெற்றிக் கதவை திறந்துவிட்ட படமாகவும் இது அமைந்தது. மிகப்பெரிய வெற்றிபெற்ற அந்தப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் வாங்கியுள்ளார்.
ஆனால் இதற்கு முன்பே தனது அனுமதி இல்லாமல் அந்தப்படத்தை போனி கபூர் ரீமேக் செய்யக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் எஸ்ஜே சூர்யா. இதற்கிடையே போனி கபூர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததில் இந்தப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை ஆரம்பிப்பதில் போனி கபூருக்கு எந்த தடையும் இல்லை என தீர்ப்பு அளிக்கப்பட்டது.
தற்போது போனி கபூர் இந்தப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். அதனால் இதை தடுத்து நிறுத்தும் விதமாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளாராம் எஸ்.ஜே.சூர்யா. இந்தப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கு எஸ்ஜே சூர்யா ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். ஒன்று அஜித் அந்த ரீமேக்கில் நடிக்க வேண்டும், அவர் நடிக்காத பட்சத்தில் தானே அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றுதான் தீர்மானித்து வைத்திருந்தாராம் எஸ்ஜே சூர்யா.
வாலி படத்தின் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி அதன் ஹிந்தி ரீமேக் உரிமையை போனி கபூருக்கு கொடுத்து விட்டாலும், ரீமேக் ஒப்பந்தத்தில் ஸ்க்ரிப்ட் ரைட்டராக எஸ்ஜே சூர்யாவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாம். அதனால் அவர் அனுமதி இல்லாமல் இந்தப்படத்தை ரீமேக் செய்ய முடியாது என்பதுதான் சூர்யா தரப்பினர் வாதம்.
ஏற்கனவே ஆரண்ய காண்டம் பட தயாரிப்பாளர்கள் இதேபோன்ற விஷயத்தில் இறங்கியபோது, அதன் ஸ்கிரிப்ட் ரைட்டரான தியாகராஜன் குமாரராஜாவுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதையே மேற்கோள்காட்டி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரலாம் என முடிவு செய்துள்ளாராம் எஸ்ஜே சூர்யா.