ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. காமெடி வேடங்களில் மட்டுமல்லாது குணச்சித்ரம், ஹீரோ என அசத்தி வருகிறார். கடந்த 2009ம் ஆண்டில் இதேநாளில் சுப்ரமணிய சிவா இயக்கத்தில் அமீர் நாயகனாக நடித்து வெளியான யோகி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் பாபு எனும் யோகி பாபு. இந்த படம் இன்றோடு திரைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆகிறது. அந்தவகையில் யோகிபாபு சினிமாவிற்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்காக நன்றி தெரிவித்துள்ளார் யோகி பாபு.
அவர் கூறுகையில், ‛‛இன்று ‛யோகி' படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகிறது. என்னை பெரிய திரையில் அறிமுகப்படுத்திய இயக்குனர் அமீர் மற்றும் சுப்ரமணிய சிவா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பெரிய திரைக்கு வருவதற்கு முன் சின்னதிரையில் 6 ஆண்டுகள் எனக்கு பெரும் துணையாக இருந்த ராம் பாலா மற்றும் அனைவருக்கும் நன்றி. தமிழில் வெளியாகி வரவேற்பை பெற்ற லவ் டுடே படம் தெலுங்கிலும் பெரும் வெற்றி அடைந்துள்ளது. விரைவில் பிரபாஸ் படத்தில் நடிக்க உள்ளேன். சினிமாவில் என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்த திரைத்துறையினர், ரசிகர்கள், குடும்பத்தினர், அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.