குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் |
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கன்னடத்தில் வெளிவந்து மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு 400 கோடியை வசூலித்த படம் 'காந்தாரா'. இப்படம் சில தினங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது. தியேட்டர்களில் படத்தைப் பார்க்காதவர்கள் தற்போது ஓடிடி தளத்தில் படத்தைப் பார்த்து தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
'காந்தாரா' படம் வெளியான அதே தினத்தில் தமிழில் வெளிவந்து 500 கோடிக்கும் அதிக வசூலைக் குவித்த படம் 'பொன்னியின் செல்வன்'. அப்படத்தின் கதாநாயகியாக திரிஷா தற்போதுதான் 'காந்தாரா' படத்தைப் பார்த்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் 'வராஹரூபம்' பாடல் காட்சியைப் பதிவு செய்து 'ப்ப்ப்ப்ப்பா……தலை வணங்குகிறேன்' என படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி, கதாநாயகி சப்தமி கவுடா, கிஷோர், மானஸி சுதிர் ஆகியோரை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
ஓடிடியில் வெளியான பின்னும் 'காந்தாரா' படம் தியேட்டர்களில் இன்னமும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.