ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் பாலா.. இயக்குனர் சிவாவின் தம்பியான இவர் 'வீரம்' படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார் . தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்த இவர் கடந்த 2010ஆம் ஆண்டு பாடகியான அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு அவந்திகா என்கிற பெண் குழந்தையும் உண்டு. ஆனால் கணவன், மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2016-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
சில வருடங்களாக தனிமையில் வாழ்ந்த பாலா கடந்த 2021 செப்டம்பரில் கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்கள் திருமணம் நடந்து முடிந்து ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக செய்தி வெளியானது. இதுகுறித்து நடிகர் பாலாவே தனது மனவருத்தத்தை வெளிப்படையாக கூறியிருந்தார். அதே சமயம் தனது இரண்டாவது மனைவி எலிசபெத் குறித்து விமர்சித்தவர்களுக்கு அவரை விமர்சிக்க வேண்டாம் அவருக்கு கொஞ்சம் அவகாசம் கொடுப்போம் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது கணவன் மனைவி இருவரும் தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக திரைப்படம் பார்க்க வந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பாலா தற்போது மலையாளத்தில் வெளியாகியுள்ள சபீக்கிண்டே சந்தோசம் என்கிற படத்தில் நாயகன் உன்னி முகுந்தனின் நண்பனாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். லூசிபர் படத்தை தொடர்ந்து மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்துள்ள படம் இது. இந்த படத்தை பார்ப்பதற்காக தனது மனைவி எலிசபெத்துடன் இவர் தியேட்டருக்கு படம் பார்க்க வந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.