பிரபல தாதாவுடன் தொடர்பு ; போலீசாரின் விசாரணை வளையத்தில் 'பிசாசு' நடிகை? | தினசரி லப்பர் பந்து நாயகியின் காலை தொட்டு வணங்கும் கணவர் | சுந்தரி நடிகைக்கு திடீர் திருமணம் | இயக்குனரின் படமாக இருக்குமா ரஜினியின் 'வேட்டையன்'? | ஹிந்தி பிக்பாஸில் முதல் தமிழ் போட்டியாளராக நுழைந்த சூர்யாவின் கதாநாயகி | மொட்டைத்தலையுடன் கோலங்கள் ஆனந்தி! என்னாச்சு அவருக்கு? | உங்களால் எனக்கு ஏற்பட்ட ரூ.1 கோடி நஷ்டம் : பிரகாஷ்ராஜை விளாசிய தயாரிப்பாளர் | உலக சாதனை புத்தகத்தில் நடிகர் அஜித்தின் நிறுவனம் | ‛தெறி' பட ஹீந்தி ரீ-மேக்கில் சல்மான் கான் | நவராத்திரி : துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பிரதிபலித்த ஏக்தா ஜெயின் |
பாலிவுட் திரையுலகின் பிரபல குணச்சித்திர நடிகர் விக்ரம் கோகலே நேற்று காலமானார். கடந்த நவம்பர் 5ம் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு புனேயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணத்தை தழுவினார். இவருக்கு வயது 78.
கடந்த 1979 முதல் சினிமா மற்றும் தொலைக்காட்சி என இரண்டிலும் ஒரு நடிகராக மிகப்பெரிய பங்களிப்பை தந்துள்ள இவர் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கமல் நடித்த ஆளவந்தான் மற்றும் ஹேராம் என இரண்டு படங்களில் நடித்துள்ளார் விக்ரம் கோகலே. இவரது மறைவுக்கு பாலிவுட் திரையுலகத்தை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் கமலும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் குறிப்பிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மேடையில் தொடங்கி, திரையில் தன் நடிப்புக்கலையை நிலை நிறுத்தியவர் விக்ரம் கோகலே. ஆளவந்தான், ஹேராம் சந்தர்ப்பங்களில் அவரது திறனை ரசித்திருக்கிறேன். உடல்நலிவால் மருத்துவமனைக்கு சென்ற இந்த மாதத்தின் தொடக்கத்திலும் அவரது படம் வெளியாகும் அளவு நடிப்பை நேசித்தவர். அவருக்கு என் அஞ்சலி” என கூறியுள்ளார் கமல்.