ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா | திரிஷா போன்ற அமெரிக்கா பெண் ஒருவர் என் மீது காதல் வயப்பட்டார் : நடிகர் பாலா புது தகவல் | எம்புரான் படத்திற்கு எந்த அரசியல் அழுத்தமும் தரப்படவில்லை : சுரேஷ் கோபி | நடிகையை கடத்தி துன்புறுத்த திலீப் தான் பணம் கொடுத்தார் : முதல் குற்றவாளி பல்சர் சுனில் பரபரப்பு பேச்சு | குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! |
விஜய், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்புக்கு யானைகள் கொண்டு வரப்பட்டது. அனுமதியின்றி யானைகளை நடிக்க வைப்பதாக வந்த தகவலை தொடர்ந்து தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று படப்பிடிப்பு நடக்கும் இடம் அருகே நின்று கொண்டு அங்குள்ள மக்களிடம் யானைகள் குறித்த நேர்காணல் செய்து வந்தனர்.
இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். உடனடியாக அந்த இடத்துக்கு வந்த போலீசார் தாக்குதல் நடத்திய விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை கைது செய்தனர். அதில் சிலர் தற்போது தலைமைறவாக உள்ளனர்.
படப்பிடிப்பை டிரோன் கேமரா மூலம் படம் பிடித்தனர் அதை நாங்கள் தடுத்தோம். அவர்கள் எங்களை தாக்கினார்கள் என்று விஜய் மன்ற நிர்வாகிகள் கூறுகிறார்கள். டிரோன் கேமரா பயன்படுத்தவில்லை. படப்பிடிப்பில் அனுமதி இன்றி யானைகள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலை உறுதி செய்யவே சென்றோம். மேலும் படப்பிடிப்பு தளத்தில் எந்த ஒரு காட்சியையும் நாங்கள் பதிவு செய்யவில்லை என்று சேனல் தரப்பு கூறியுள்ளது.