'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
13 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஹாலிவுட் படமான அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. இந்த படம் உலகெங்கிலும் வரும் டிசம்பர் 16ம் தேதி வெளியாக இருக்கிறது. அவதார் படத்திற்கு இந்தியாவில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியால் அதன் இரண்டாம் பாகத்துக்கு இங்கே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனால் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிக அளவில் திரையரங்குகள் அவருக்காக ஒதுக்கப்பட இருக்கின்றன.
தமிழில் கூட தனுஷ் நடித்துள்ள வாத்தி உள்ளிட்ட சில படங்கள் அவதார் 2 வெளியாவதால் தங்களது ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதேசமயம் கேரளாவில் அவதார் வெளியானாலும் அதுபற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் நடிகர் பிரித்விராஜின் இரண்டு படங்கள் அவதாருக்கு முன்னும் பின்னும் வெளியாவதற்கு தயாராகி வருகின்றன.
இதில் அவதார் வெளியான ஒரு வாரம் கழித்து டிசம்பர் 22ல் பிரித்விராஜ் நடித்துள்ள காபா என்கிற படம் வெளியாக இருப்பது உறுதியாகிவிட்டது. ஷாஜி கைலாஷ் டைரக்ஷனில் கேங்ஸ்டர் படமாக இந்த படம் உருவாகி உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது.
அதேபோல அவதார் வெளியாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அதாவது டிசம்பர் 2ம் தேதி, அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் பிரித்விராஜ், நயன்தாரா இணைந்து நடித்துள்ள கோல்ட் திரைப்படம் ரிலீஸாகும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஓணம் பண்டிகைக்கே வெளியாக வேண்டிய இந்தப்படம் சில காரணங்களால் தள்ளிப்போய் கிறிஸ்துமஸ் ரிலீசாக வெளியாகும் என இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனால் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது காபா படம் அந்த தேதியை பிடித்துக் கொண்டதால் அதற்கு முன்கூட்டியே ரிலீஸ் செய்யும் வேலைகளை துரிதப்படுத்தி உள்ளாராம் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.