விஜய்யின் 67 வது பட பூஜை: வீடியோ வெளியானது | அஜித் 62வது படத்தை இயக்கும் மகிழ்திருமேனி | வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வனிதாவின் போட்டோஷூட் | அசீமின் இன்னொரு முகம் : மைனா நந்தினி சொன்ன சீக்ரெட் | தன்னை கேலி செய்த நபருக்கு பொறுமையாக பதில் கொடுத்த ஜாக்குலின் | பாரதி கண்ணம்மா சீசன்2வை உறுதி செய்த இயக்குநர் பிரவீன் பென்னட்! | கல்வி நிலையங்களில் சினிமா விழாக்கள், நிறுத்தப்படுமா ? | 'பாகுபலி 2' வசூலை முறியடிக்குமா 'பதான்' ? | ரூ.100 கோடி வசூலித்த 'மாளிகப்புரம்' | 'வாத்தி' இயக்குனரின் திருமணத்தில் கீர்த்தி சுரேஷ் |
தெலுங்கு நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா(79), உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் காலமானார். மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் இன்று(நவ., 15) பிரிந்தது.
தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் கிருஷ்ணா. ஏராளமான வெற்றி படங்களில் நடித்த இவர் படங்கள் தயாரித்தும், இயக்கியும் உள்ளார். இவரது மகனான கிருஷ்ணா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். வயது மூப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில் திடீரென நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூச்சுதிணறல் ஏற்பட்டு இன்று(நவ.,15) காலை அவரது உயிர் பிரிந்தது.
தெலுங்கு சினிமாவில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் விக்ரம் நடித்த கந்தசாமி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.