'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இந்தாண்டில் தொடர்ச்சியாக மூன்று வெற்றி படங்களை கொடுத்துள்ளார் நடிகர் கார்த்தி. அடுத்து இவரின் 25வது படமாக ஜப்பான் உருவாகிறது. இதை ஜோக்கர் பட புகழ் ராஜு முருகன் இயக்குகிறார். அனு இமானுவல் நாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் தெலுங்கு நடிகர் சுனில் நடிக்கிறார். சமீபத்தில் இதன் பட பூஜை நடந்தது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இந்நிலையில் படத்தின் முதல் பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதில் தக தக என மின்னும் தங்க நிற உடையில் இருக்கிறார் கார்த்தி. ஒரு கையில் உலக உருண்டை, மற்றொரு கையில் துப்பாக்கி, கழுத்து நிறைய தங்க நகைகள், அதில் உள்ள ஒரு டாலரில் இந்திய ரூபாயின் மதிப்பை குறிக்கும் குறியீடு போன்றவை இடம் பெற்றுள்ளது. அதே போஸ்டரில் ஒரு சேரில் போதையில் கார்த்தி அமர்ந்திருப்பது போன்று உள்ளது. வித்தியாசமாக உள்ள இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாய் கவர்ந்துள்ளது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இதனால் நான்கு மொழிகளிலும் படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர்.