'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை நடிகர் கிருஷ்ணா(79) ஐதராபாத்தில் இன்று(நவ., 15) காலமானார். இந்தாண்டில் அண்ணன், அம்மா ஆகியோரை அடுத்து இப்போது தந்தையையும் இழந்த மகேஷ்பாபுவிற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ்பாபு. இவரது தந்தை கிருஷ்ணாவும் தெலுங்கு சினிமாவின் முன்னாள் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தார். இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். வயது மூப்பால் ஏற்பட்ட பல்வேறு உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று(நவ., 15) காலை அவரது உயிர் பிரிந்தது. கிருஷ்ணாவின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜன., 8ம் தேதி மகேஷ்பாபுவின் சகோதரரும், நடிகரும், தயாரிப்பாளருமான ரமேஷ்பாபு (56) உடல்நலபிரச்னையால் காலமானார்.
கடந்த செப்., 28ம் தேதி, மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவி(70) வயது மூப்பு காரணமாக காலமானார்.
இன்று நவ., 15ம் தேதி மகேஷ்பாபுவின் தந்தையான கிருஷ்ணா(79) உடல்நல பிரச்னையால் காலமானார்.
இப்படி ஒரே ஆண்டில் மகேஷ்பாபு வீட்டில் மூன்று சோக நிகழ்வுகள் நடந்துள்ளன. இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். StaystrongAnna என்ற ஹேஷ்டாக்கில் ரசிகர்கள் பலரும் மகேஷ்பாபுவிற்கு ஆறுதல் தெரிவித்து டிரெண்ட் செய்தனர்.