'மதராஸி'யில் வட இந்தியர், தென் இந்தியர் மோதலா? : ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி'க்கு இன்று பொன்விழா | பேண்டஸி படமாக 'விஸ்வம்பரா' | தமிழ் படத்தில் இங்கிலாந்து நடிகை | நடிகை பாலியல் குற்றச்சாட்டு : கேரள இளைஞர் காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ | பிளாஷ்பேக் : அவமானங்களை வெகுமானமாக்கி வென்ற சிரஞ்சீவி | ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்? | தள்ளிப் போகிறது 'டுயூட்' | மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் ஹிந்தியில் தடாக், ரோகி, குட்லக் ஜெர்ரி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அவர் கதையின் நாயகியாக நடித்துள்ள மிலி என்ற படம் திரைக்கு வந்துள்ளது. முத்துக்குட்டி சேவியர் இயக்கியுள்ள இந்த படத்தின் புரமோஷனுக்காக ஐதராபாத் வந்திருந்த ஜான்வி கபூரிடம், ஏற்கனவே தேடி வந்த சில தெலுங்கு பட வாய்ப்புகளை தவிர்த்தது ஏன்? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, அப்போது ஹிந்தி படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் தெலுங்கு படங்களை ஏற்க முடியவில்லை என்று பதில் கூறியிருக்கிறார் . அதோடு தற்போது தெலுங்கு படங்களில் பணியாற்ற மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் , ஒரு பெரிய வாய்ப்புக்காக தான் காத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். முன்னணி ஹீரோவின் பட வாய்ப்பு என்பதோடு, தனக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வேடமாக இருக்கும் பட்சத்தில் தெலுங்கில் உடனடியாக நடிப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் ஜான்வி கபூர்.