சூர்யாவிற்கு ஜோடியாக நஸ்ரியா! | தனுஷூக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை? | தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை திருப்பிய கார்த்திக் சுப்பராஜ்! | கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படம்! | ஹிந்தியில் ரீமேக் ஆகும் டிராகன்! | பக்தி முதல் காமெடி வரை: இந்த வாரம் வரிசை கட்டும் ஓடிடி ரிலீஸ் | ‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை |
தனுஷ் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இருமொழி படமாக உருவாகி உளு்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வாத்தி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. நேரடியாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற டிசம்பர் 2ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில் அறிவித்த தேதியில் இப்படம் வெளியாகாது என சினிமா வட்டங்களில் பேசப்பட்டு வருகிறது. அடுத்த பிப்ரவரி 17ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது . இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .