ராடானுடன் கைகோர்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்! விரைவில் சின்னத்திரை என்ட்ரி | கவர்ச்சிக்கு வயது தடை கிடையாது ? : இத்தனை வயதிலும் அசத்தும் ஸ்ரேயா | 'டிரோல்'களுக்கு பதிலடி கொடுத்த தமன் | 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் |
தென்னிந்திய சினிமா வரலாற்றில் கடந்த 20 ஆண்டுகளாக ஹீரோயினாக மட்டுமே நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா. சமீபகாலங்களில் இவர் நடிக்கும் படங்கள் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் அவருக்கான மார்க்கெட் இன்னும் குறையவேவில்லை. மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவையாக ரீ என்ட்ரி கொடுத்த த்ரிஷா, படத்தில் நடித்த மற்ற அழகிகளை விடவும் ரசிகர்கள் மனதை மிகவும் கவர்ந்தார். அந்த அளவுக்கு தென்னிந்திய திரையுலகில் அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகை என்றால் த்ரிஷா மட்டும் தான்.
இந்நிலையில், த்ரிஷா தனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் வெகேஷன் கேன்சலாகிவிட்டது என்று புகைப்படத்துடன் ஸ்டோரி பதிவிட்டிருந்தார். த்ரிஷாவின் வலது காலை சுற்றி பெரிதாக போடப்பட்டுள்ள பேண்டேஜ் புகைப்படத்தை பார்த்து 'எங்க செல்லத்துக்கு என்ன ஆச்சு? ஏன் இவ்ளோ பெரிய கட்டு?' என கேட்டு வருகின்றனர் அவரது ரசிகர்கள். சோகத்தில் மூழ்கியுள்ள சில ரசிகர்கள் வடிவேலு ஸ்டைலில், 'உடைஞ்சது அவங்க கால் எலும்பு இல்ல, எங்களோட குட்டி நெஞ்சு சாரே' என ஹார்ட் ப்ரோக்கன் எமோஜிகளுடன் பதிவிட்டு வருகின்றனர்.