9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் உள்ள நடிகர் திலீப், கடந்த சில வருடங்களாக நடிகை கடத்தல் வழக்கு தொடர்பாக பல சோதனைகளை சந்தித்து வந்தாலும் திரையுலகை பொறுத்தவரை அவரது மார்க்கெட் ஸ்டெடியாகவே உள்ளது. வழக்கு விசாரணைகள் ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் திலீப். இந்த நிலையில் அவர் ஏற்கனவே தனக்கு ராம்லீலா என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அருண் கோபியுடன் மீண்டும் இணைந்து தனது 147வது படத்தில் தற்போது பணியாற்றி வருகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் நடிகை தமன்னா முதன்முதலில் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் சரத்குமார், ஈஸ்வரி ராவ், விடிவி கணேஷ் உள்ளிட்ட தமிழ் நட்சத்திரங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது திலீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்திற்குப் 'பாந்த்ரா' என டைட்டில் வைக்கப்பட்டு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்படம் மும்பை பின்னணியில் நடைபெறும் கேங்ஸ்டர் பாணியிலான படமாக தயாராகிறது என்றும் சொல்லப்படுகிறது.