என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேரி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது | சூரி படத்துக்கு ஓடிடி-யில் இழுபறி | ஓடிடி நிறுவனங்களுக்கு திரையரங்க உரிமையாளர்கள் வைக்கும் செக் | இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் |
சமீபகாலமாக அரசியலில் பயணித்து வரும் குஷ்பு தனது உடல் எடையை குறைத்து சினிமாவிலும் கவனத்தை திருப்பி இருக்கிறார். அந்த வகையில் தெலுங்கில் ஷர்வானந்த் - ராஷ்மிகா மந்தனா நடித்த அடவல்லு மீக்கு ஜோஹார்லு என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதையடுத்து விஜய் நடித்து வரும் வாரிசு படத்திலும் குஷ்பு முக்கிய கேரக்டர் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது ஐதராபாத்தில் இன்னொரு தெலுங்கு படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வரும் குஷ்பு, விஜய் படத்தில் தான் நடிப்பதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார். வாரிசு படத்தில் விஜய் மட்டுமின்றி தனது மாஜி ஹீரோக்களான பிரபு, சரத்குமார் ஆகியோரை சந்திப்பதற்காகவே தான் அந்த படப்பிடிப்பு தளத்துக்கு சென்றதாகவும், அப்போது அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரல் ஆனதால் விஜய் படத்தில் தான் நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன என்றும் குஷ்பு தெரிவித்திருக்கிறது.