ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? |

திரைப்பட இயக்குனர்கள் தங்கள் கதைகளை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வந்தார்கள். கதை தொடர்பான பிரச்னைகள், வழக்குகள் வந்தால் இந்த பதிவு அதில் முக்கியமான பங்கு வகிக்கும். ஆனால் இந்த கதை பதிவில் முறைகேடுகள் நடப்பதாக கூறி இனி இயக்குனர்கள் தமிழ்நாடு இயக்குனர் சங்கத்திலேயே கதையை பதிவு செய்யலாம் என்று அறிவித்தது. இந்த கதை பதிவு தொடர்பாக இரு சங்கங்களும் மோதிக் கொண்டிருந்தன. இதில் தற்போது சுமுகமான முடிவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: எழுத்தாளர் சங்கத்திற்கும், நமது சங்கத்திற்கும் நடைமுறையில் இருந்த கதைப்பதிவு ஒப்பந்தம் புதுப்பிக்காததாலும், உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை கட்டனம் மற்றும் கதை பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டதாலும் இயக்குனர் சங்க உறுப்பினர்கள் நமது சங்கத்திலேயே கதையை பதிவு செய்யலாம் என முடிவு செய்தோம். இந்த நிலையில் எழுத்தாளர்சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் நமது சங்க நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து அனைத்து பிரச்னைகளையும் சமூகமாக முடித்து தருகிறோம். எழுத்தாளர் சங்கத்தின் ஆணி வேரான கதை பதிவை எழுத்தாளர் சங்கத்திற்கே தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் அனைத்து கட்டணங்களையும் கணிசமாக குறைப்பதாக கூறினார். கதை தொடர்பான பிரச்னை ஏற்பட்டால் தன்னிச்சையாக செயல்படாமல் பெப்சி அமைப்புடன் இணைந்து செயல்படுவதாக கூறியிருக்கிறார். எனவே இரு சங்கமும் இணைந்து செயல்படும் நோக்கோடு எழுத்தாளர் சங்கத்தின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. இனி இயக்குனர்கள் தங்கள் கதையை எழுத்தாளர் சங்கத்திலேயே பதிவு செய்யலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.