2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

பழம்பெரும் நடிகர் ஐஸ்டினின் மகள் பபிதா. கவர்ச்சி நடிகையாகவும், ஒரு பாடலுக்கு ஆடுபராகவும் சினிமாவில் வலம் வந்தார். 'நாயகன்' படத்தில் வரும் “நான் சிரித்தால் தீபாவளி..” பாடல் மூலம் புகழ்பெற்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம். கன்னடம், ஹிந்தி என 120 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் பபிதா, திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கமல்ஹாசன், விஜய், பாக்யராஜ், டி.ராஜேந்தர், கார்த்திக் உட்பட பல ஹீரோக்கள் படத்தில் நான் நடித்துவிட்டேன். ஆனால் திருமணத்திற்கு பிறகு என்னால் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பதுபோல இப்போது மீண்டும் நடிக்கும் எண்ணம் ஏற்பட்டுள்ளது.
என்னுடைய தந்தை ஜஸ்டின், எம்ஜிஆர் படங்களில் நடித்து பின்னாளில் எம்ஜிஆர் முதல்வரான பிறகும் அவரிடம் எந்தப் பிரதிபலனும் பாராமல் அவரது விசுவாசியாக கடைசி வரை அவருக்காக உழைத்தவர் என்பது பலருக்கும் தெரியும். அவரது மகளான எனக்கும் அவரது குணமே இருக்கிறது. இன்றைய சினிமா நிறைய புதுமைகளையும், மாற்றங்களையும் கொண்டதாக இருக்கிறது. இந்த வயதில் உள்ளவர்கள்தான் இந்த கேரக்டர் செய்யணும் என்ற நிலமையெல்லாம் மாறிவிட்டது.
என் ரத்தத்தில் நடனம் என்பது ஊறியுள்ளது. அதனால் இப்போதும் ஒரு பாடலுக்கு நடனமாடச்சொன்னால் நடனமாடுவேன். வில்லியாக நடிக்கச்சொன்னாலும் நடிப்பேன். ஒரு நடிகருக்கோ, நடிகைக்கோ நடிப்புதான் முக்கியம் தவிர கேரக்டர் முக்கியமில்லை. அதனால் அக்கா, அண்ணி, அம்மா என எந்த வேடம் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். என்கிறார் பபிதா.