ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 | வனிதா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு |
நடிகை குஷ்பு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதுகு தண்டு பிரச்னையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்பு பூரண நலம் பெற்று திரும்பினார். அதன்பிறகு சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கினார். கடந்த ஆயுதபூஜை தினத்தன்று கூட தனது அண்ணன் அப்துல்லா நடித்துள்ள ஒன் வே என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் உற்சாகமாக கலந்து கொண்டார்.
இந்த நிலையில் குஷ்பு தான் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் படத்தை வெளியிட்டு முதுகெலும்பு பிரச்னை தொடர்பாக சிகிச்சை பெறுவதாகவும் இன்னும் ஓரிரு நாளில் மீண்டும் எனது பணிகளுக்கு திரும்பி விடுவேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். குஷ்பு தனது உடல் எடையை கணிசமாக குறைத்த பிறகுதான் அவருக்கு பல உடல்நல பிரச்னைகள் அடுத்தடுத்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.