மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
தமிழ் சினிமா உலகில் 'களத்தூர் கண்ணம்மா' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். அதன் பிறகு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவருக்கு இளம் வயதில் ஒரு இடைவெளி ஏற்பட்டது. இருப்பினும் உதவி நடன இயக்குனராக சினிமாவில் தனது பணியைத் தொடர்ந்தார். பின்னர் மீண்டும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து தனி கதாநாயகனாக மாறி கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக கதாநாயகனாக மட்டுமே பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து இன்றைய பல கதாநாயகர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.
அவர் தயாரித்து, நடித்து இந்த வருடம் வெளிவந்த 'விக்ரம்' படம் இதுவரையில் இல்லாத அளவிற்கு தமிழ் சினிமாவில் புதிய வசூல் சாதனையைப் படைத்தது. அந்தப் படத்தின் வசூல் சாதனையை குறுகிய காலத்திலேயே 'பொன்னியின் செல்வன்' முறியடிக்க உள்ளதாக தற்போதைய பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நேற்று விக்ரம், கார்த்தி ஆகியோருடன் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் ஐமேக்ஸ் திரையில் 'பொன்னியின் செல்வன்' படத்தைப் பார்த்த கமல்ஹாசன் பின்னர் செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது படத்தைப் பற்றியும் மேலும் சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். அப்போது கமல்ஹாசனுடன் விக்ரம், கார்த்தி, லைகா நிறுவனத்தின் தமிழ்க்குமரன் ஆகியோர் இருந்தனர்.
பேட்டி முடிந்து குழு புகைப்படத்திற்கு நிற்கும் போது கமல்ஹாசனிடம் விக்ரம், “எப்படி சார் இப்படி பேசுறீங்க, எல்லா விஷயங்களையும் தெரிஞ்சி வச்சிருக்கீங்க, ஓ மை காட், அறிவு புத்தகம் நீங்க,” என வியந்து பாராட்டினார். அந்த பாராட்டிற்கு சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்தார் கமல்ஹாசன்.