இந்தியன் 3 பிரச்னையை கேம் சேஞ்சருக்குள் கொண்டு வருவதா? - தில்ராஜு ஆவேசம் | ஜான்வி கபூரிடம் ஸ்ரீதேவியை பார்க்க முடியவில்லை : ராம் கோபால் வர்மா | ராஜமவுலி - மகேஷ்பாபு படம் ரிலீஸ் எப்போது? - ராம்சரண் ஆருடம் | கேரளா திரும்பியதுமே எம்.டி வாசுதேவன் நாயர் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய மம்முட்டி | இயக்குனர் ஷங்கர் தான் எனது இன்ஸ்பிரேஷன் : ராஜமவுலி | ஒரே நாளில் மோதிக்கொள்ளும் அஜித் - தனுஷ் படங்கள் | மகாநடி படத்தில் முதலில் நடிக்க மறுத்தது ஏன்? - மனம் திறந்த கீர்த்தி சுரேஷ் | லண்டனில் தயாராகும் வேலு நாச்சியார் படம் | பான் இந்தியா படமாக வெளியாகும் 'அகத்தியா' | என் வருமானத்தை தடுக்காதீர்கள் - ஷாருக்கான் ஆதங்கம் |
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான நடுநிசி நாய்கள் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் அஸ்வின் காக்குமனு. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, அஜித்தின் மங்காத்தா, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஒருசில படங்களில் கதாநாயகனாகவும் நடித்த இவர், சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி மற்றும் ஜெயராம் இருவருடன் இணைந்து பயணிக்கும் விதமாக சேந்தன் அமுதன் என்கிற முக்கியத்துவமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் தற்போது ஹேராம் படத்தில் கமல் நடித்த சாகேத் ராம் கதாபாத்திர தோற்றத்தை மீளுருவாக்கம் செய்யும் விதமாக தனது தோற்றத்தை மாற்றி அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் அஸ்வின். கிட்டத்தட்ட கமலின் சாயலிலேயே அவர் இருப்பதாக ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அஸ்வின் கூறும்போது, திரைப்படங்களில், தொடர்களில் எனக்கு தாக்கத்தை ஏற்படுத்திய பிரசித்தி பெற்ற கதாபாத்திரங்களை மீளுருவாக்கம் செய்து புகைப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன். அதன் முதல் கிளிக் தான் இது, என்றார்.