பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படம் நாளை மறுநாள் செப்டம்பர் 30ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்திற்காக படக்குழுவினர் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தனர். இந்திய அளவில் தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது 'பொன்னியின் செல்வன்'.
இந்தப் படத்திற்கு அடுத்து தெலுங்கிலிருந்து 'ஷாகுந்தலம்' என்ற சரித்திரப் படம் நவம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கில் சில பல வெற்றிப் படங்களைக் கொடுத்த குணசேகர் இயக்கியிருக்கும் இப்படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்திலும், மலையாள நடிகர் தேவ் மோகன் துஷ்யந்தன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்கான புரமோஷன் சுற்றுப் பயணத்தை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களிலும், பொது நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் சமந்தா. தற்போது இந்தப் படத்திற்காக சமூக வலைத்தளங்களில் தனது பதிவுகளை பதிவிட ஆரம்பித்துள்ளார். புரமோஷன் சுற்றுப் பயணத்திலும் அவர் கலந்து கொள்ள உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.