'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான படமாக நாளை மறுநாள் செப்டம்பர் 30ம் தேதி மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படம் வெளியாகிறது. இப்படத்தை ஒரு சிலர் 'பாகுபலி' படத்துடன் ஒப்பிட்டுப் பேசி வருகிறார்கள். ஆனால், 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களையும் மிகக் குறைந்த நாட்களில் படமாக்கி முடித்திருக்கிறார் மணிரத்னம். அது பற்றிய தகவலை பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி தெரிவித்திருக்கிறார்.
“சமீபத்தில் இயக்குனர் ராஜமவுலியைச் சந்தித்தேன். அவரிடம் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களையும் நாங்கள் 150 நாட்களில் எடுத்த முடித்துவிட்டோம் என்றேன். அவர் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். நான் 'பிரான்க்' செய்கிறேன் என அவர் திரும்பக் கேட்டார். அதற்கு உண்மைதான் சார் 150 நாட்களில் படப்பிடிப்பை முடித்தோம் என்றேன். அவ்வளவு சீக்கிரத்தில் படப்பிடிப்பை முடிக்கக் காரணமாக இருந்த திட்டங்கள், செயல்முறை என்ன என்று அவர் ஆர்வத்துடன் கேட்டார்,” என அந்த பேட்டியில் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகப் படப்பிடிப்புகளும் 600 நாட்கள் வரை நடைபெற்றதாக அப்போது செய்திகள் வெளிவந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று.