'ரெட்ரோ' - சொந்தக் குரலில் டப்பிங் பேசிய பூஜா ஹெக்டே | தனுஷ் படம் குறித்து பகிர்ந்த கிர்த்தி சனோன் | சர்ச்சை வீடியோ விவகாரம் : பிக்பாஸ் விக்ரமன் வெளியிட்ட தகவல் | 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு கம்பேக் தரும் சங்கீதா | சர்தார் 2 டப்பிங் பணிகளை தொடங்கிய கார்த்தி | ரம்பாவின் சொத்து மதிப்பு 2000 கோடி: தயாரிப்பாளர் தாணு தந்த தகவல் | ஸ்ரீதேவியின் 'மாம்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் மகள் குஷி கபூர் | ஹிந்தியில் 'டாப் ஸ்டார்' ஆகும் ராஷ்மிகா மந்தனா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனியை அரங்கேற்றும் லிடியன் நாதஸ்வரம் | நீண்ட நாள் நண்பரை கை பிடிக்கும் அபிநயா |
'பொன்னியின் செல்வன்' படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமான நந்தினி கதாபாத்திரத்திலும், மந்தாகினி கதாபாத்திரத்திலும் நடித்திருப்பவர் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய். நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயின் நடிப்பு எப்படி இருக்கப் போகிறது என நாவல் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஐஸ்வர்யா ராய் என்றாலே சினிமா ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சினிமா பிரபலங்களுக்கும் ஒரு மகிழ்ச்சி தானாகவே வரும். அதுவும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து நடித்தவர்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ. அப்படி ஒரு மகிழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் பற்றி ஒரு பாராட்டுப் பத்திரம் பதிவிட்டிருக்கிறார் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன். மேலும் சில செல்பி புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
ஐஸ் வாரியம் !
கற்றுக் கொள்ள….
காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டிக் கிடக்கின்றது இப்பூமியில். அப்படி
இப்பெண்ணிடமிருந்து…
தாயானப் பிறகும், தான் விரும்பும் கலையை தொடர, ஆரோக்கியத்தை + அழகை காத்திட கடும் முயற்சியும், விடா பயிற்சியும் செய்கிறார்.
அழகென நான் காண்பது…
பிறைநிலவு வானில் இருந்து மறையுமுன்னே
முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர்
வசனங்களை(இடை வரும் புன்னகை உட்பட) மனப்பாடம் செய்து one more கேட்கா egoவுடன்
தயாராகிவிட்டு, பின் அனைவரிடமும்(selfie) அன்பொழுக பழகுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'பொன்னியின் செல்வன்' படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ளார் பார்த்திபன்.