சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சிவா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் 42வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது. படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் சிலவற்றை யாரோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி இருந்தார்கள். சரித்திர காலப் படமாக உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களைப் பார்த்த பின் இது நிகழ்காலப் படமாக இருக்கிறதே என்றும் பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இது படக்குழுவினருக்கு தேவையற்ற சர்ச்சையை உருவாக்கியது.
இந்நிலையில் படக்குழுவினர் சார்பில் “அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்” என ஆரம்பித்து “சூர்யா 42 படத்தின் சில வீடியோக்கள் புகைப்படங்கள் பகிரப்பட்டதை அறிந்தோம். மொத்த குழுவினாரால் ரத்தமும், வியர்வையும் சிந்தி ஒவ்வொரு வேலையும் செய்யப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் சிறந்த தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்க இந்தப் படத்தை பரிசாக வழங்க உள்ளோம். நீங்கள் பதிவு செய்த வீடியோக்கள், புகைப்படங்களை நீக்கிவிடுங்கள், எதிர்காலத்திலும் இப்படி பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அதே சமயம், தொடர்ந்து இப்படி பகிர்ந்தால் உங்கள் மீது 'பதிப்புரிமை மீறல்' சட்டப்படி தக்க கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்போம்,” என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்கள்.
இந்த ஆண்ட்ராய் மொபைல் யுகத்தில் இப்படிப்பட்ட விஷயங்களை தடுப்பது சவாலான ஒரு விஷயமாக இருக்கிறது. தியேட்டர்களில் படம் பார்க்கும் போது கூட பல ரசிகர்கள் படத்தின் ஆரம்பக் காட்சிகள், முக்கியக் காட்சிகள் ஆகியவற்றை படமாக்கி சமூக வலைத்தளங்களில் பகிர்கிறார்கள். அதைப் பற்றி இதுவரை எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் எச்சரிக்கை விடுத்ததில்லை, சட்டப்படி நடவடிக்கையும் எடுத்ததில்லை.