சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடிக்கும் சூர்யாவின் 42வது படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் 3டி டெக்னாலஜியில் 10 மொழிகளில் இப்படம் உருவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சரித்திர கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமரத்தார் ஆகிய கேரக்டர்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டரை வைத்து பார்க்கும்போது இப்படம் மிகப்பெரிய தொழில்நுட்பத்துடன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருப்பது தெரிகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.