'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
தற்போது பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அதோடு ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து சுதா இயக்கிவரும் சூரரை போற்று படத்தின் ரீமேக்கிலும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இப்படியான நிலையில் அடுத்தபடியாக சூர்யா, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கப் போகிறாரா? இல்லை சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க போகிறாரா? என்கிற கேள்விகள் எழுந்து வந்த நிலையில், தற்போது சிறுத்தை சிவா இயக்கும் தனது 42வது படத்தில் சூர்யா நடிப்பது உறுதியாகி உள்ளது.
இன்று (ஆக.,21) காலை சென்னையில் சூர்யா-42வது படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.