'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சார்பட்டா பரம்பரை படத்தை அடுத்து பா. ரஞ்சித் இயக்கி உள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் இம்மாதம் 31ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித்திடத்தில், இசைஞானி இளையராஜாவுடன் இணைவீர்களா? என்று கேட்டால், எனக்கு மிகவும் பிடித்தமானவர்களை நான் எப்போதுமே தள்ளி நின்றே பார்ப்பேன். அதனால் இசைஞானியுடன் இணைந்து செயல்பட முடியும் என்று நான் இதுவரை நினைத்ததில்லை. அவரை நெருங்கவே தயக்கமாக உள்ளது. அவர் ஒரு மிகப்பெரிய மேதை. இளையராஜா இல்லை என்றால் நானெல்லாம் இந்த இடத்திற்கு வந்திருக்கவே முடியாது. எனக்கு வழிகாட்டிய என் முன்னத்தி ஏரை நம்பித்தான் எங்கள் வீட்டில் என்னை சினிமாவுக்கு அனுப்பி வைத்தார்கள். இளையராஜாவின் பாடல்கள் எனக்கு எப்பவுமே தன்னம்பிக்கை கொடுக்கும் பாடல்களாக இருந்து வருகின்றன. அவரை தினம் ரசிக்கும் ரசிகன் நான் என்று கூறும் பா.ரஞ்சித், நட்சத்திரம் நகர்கிறது படம் இதுவரை நான் எடுத்த சினிமாவில் ஒரு மாறுபட்ட படமாக இருக்கும். என்னுடைய சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படமாகவும் இருக்கும் என்கிறார்.