'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு புதிய பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி, தெலுங்கில் நடித்து வந்தவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் மீண்டும் தமிழுக்கு வந்தார். இந்த படமும் முதல் படத்தை போலவே எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. தற்போது மீண்டும் அவர் தெலுங்கு, ஹிந்தியில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பீஸ்ட் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்றாலும் அந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தன. அதிலும் அனிருத் இசையில் உருவான அரபிக் குத்து பாடல் யூடியூப்பில் பல மில்லியன் பார்வைகள் பெற்று தொடர்ந்து சாதனை செய்து கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் தற்போது அரபிக் குத்து பாடலில் படத்தில் இடம்பெறாத நீக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் பூஜா ஹெக்டே. அதை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.