பிளாஷ்பேக்: தமிழில் சினிமாவான தெலுங்கு நாடகம் | ரஜினியின் அதிசய பிறவி பாணியில் தர்ஷன் நடிக்கும் படம் | முதலில் மறக்கப்பட்டதா ‛ஜனனி' பாடல் : பாடி முடித்து வைத்த இளையராஜா | கேரளாவில் 'காந்தாரா 2' வெளியீடு சிக்கல் சுமூகமாக தீர்ந்தது | தயாரிப்பு நிறுவனம் துவங்கிய 'மின்னல் முரளி' இயக்குனர் | லோகா படப்பிடிப்பின் போது வீட்டுக்கு செல்வதையே தவிர்த்தேன் ; சாண்டி | ஹிந்தியில் ஹீரோ கிடைக்காததால் மிராஜ் படத்தை மலையாளத்தில் இயக்கினேன் ; ஜீத்து ஜோசப் | தாராளமாக வெளியேறலாம் ; பிக்பாஸ் வைல்ட் கார்டு போட்டியாளர்களிடம் கோபம் காட்டிய மோகன்லால் | ‛வட சென்னை 2' வில் தனுஷ் : வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது | குல தெய்வம் கோயிலுக்கு போங்க : ரசிகர்களுக்கு தனுஷ் அட்வைஸ் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். திருமணம் செய்து கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தைக்கும் தாயானார் காஜல். திருமணத்திற்கு முன்பாகவே அவர் தமிழில் நடித்து வந்த படம் 'இந்தியன் 2'. அப்படம் பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு ஆரம்பமாகி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இடையில் இப்படத்திலிருந்து காஜல் நீக்கப்பட்டுவிட்டார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. அவை அனைத்தும் வதந்திகள் என பின்னர் தெரிய வந்தது.
தற்போது இந்தப் படத்திற்காக காஜல் அகர்வால் குதிரையேற்றப் பயிற்சி செய்து வருகிறார். குழந்தை பெற்றதற்குப் பின்பு தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும், மீண்டும் பழைய நிலைக்கு வருவது பற்றியும் நேற்று தன்னுடைய பெரிய பதிவு ஒன்றைப் போட்டிருந்தார். “இந்தியன் 2, உங்களுடன் மீண்டும் பயிற்சியில் குதித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது பணியில் புதிய திறமைகளை கற்றுக் கொள்வதற்கும், பின்னர் அவற்றை பொழுதுபோக்காக தொடர்வதற்கும் தூண்டியுள்ளீர்கள். வீடு என்று நான் அழைக்கும், இத்தொழிலின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் அதிர்ஷ்டசாலி என்றே நினைக்கிறேன். தொடர்ந்து கற்றுக்கொள்ளவும், எனக்கு வாய்ப்பளித்ததற்கும், என்னை மேம்படுத்திக் கொள்ள உதவுவதற்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காஜலின் இந்தப் பதிவிற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து லைக் செய்து வருகின்றனர்.