ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் |
தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் 1 இடத்தில் இருப்பவர் ரஜினிகாந்த். அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷைத் திருமணம் செய்து கொண்டார். இரண்டு மகன்கள் பிறந்து பல வருட குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு அவர்கள் தங்களது பிரிவைப் பற்றி அறிவித்தனர். ஆனாலும், சமீபத்தில் தங்களது மூத்த மகனின் பள்ளி நிகழ்ச்சிக்கு ஒன்றாகக் கலந்து கொண்டனர்.
ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா முதல் கணவரை விட்டுப் பிரிந்த பிறகு நடிகரும், தொழிலதிபருமான விசாகனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பத்து நாட்களுக்கு முன்பு தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததைப் பற்றியும், குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி எனப் பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று கையில் குழந்தையுடனும், பின்னால் அப்பா ரஜினிகாந்த் நிற்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு, “என்னுடைய பிறந்தநாளுக்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்த ஆண்டில் கடவுள் எனக்குக் கொடுத்த சிறந்த பரிசு, எனது வீர் பாப்பா. எனக்குப் பின்னால் கடவுளின் இந்த அற்புத குழந்தை எப்போதும் இருப்பது, வாழ்க்கை ஒரு உண்மையான ஆசீர்வாதம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.