'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

தென்னிந்திய அளவில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் சேர்த்து மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் படமாக பொன்னியின் செல்வன் அமைந்துள்ளது. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். அதில் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. ஐஸ்வர்யாராய் உட்பட பல மொழி திரையுலகை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ஒவ்வொரு மொழியிலும் வெளியாக உள்ள இந்த படத்திற்காக அந்த மொழிகளை சேர்ந்த பிரபல ஹீரோக்கள் டிரைலர் மற்றும் படத்திற்காக குரல் கொடுத்துள்ளனர். அந்த வகையில் இந்த படத்தின் மலையாள டிரைலருக்கு நடிகர் பிரித்விராஜ் குரல் கொடுத்திருந்தார். இதன் மலையாள வெர்சனில் படம் ஆரம்பிக்கும்போது இதன் கதையை சொல்லி படத்தை துவங்கி வைக்கும் விதமாக குரல் கொடுத்து இருக்கிறார் நடிகர் மம்முட்டி. கேரளாவில் நேற்று நடைபெற்ற இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியின்போது இந்த விஷயத்தை கூறி இந்த இருவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
கடந்த 30 வருடங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் மம்முட்டியும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அவரது இயக்கத்தில் வெளியான ராவணன் படத்தில் பிரித்விராஜும் நடித்திருந்தனர். அந்த நட்புக்காக தற்போது இவர்கள் இருவரும் பொன்னியின் செல்வன் படத்திற்கு குரல் கொடுத்துள்ளனர்.