மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் |

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன் 2010ம் ஆண்டில் விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'மதராசப்பட்டிணம்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்குப் பிறகு தமிழில் 'தாண்டவம், ஐ, கெத்து, தெறி, 2.0' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் ஹிந்தி, தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்தார்.
ஜார்ஜ் பனாயிட்டோவ் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே எமி ஜாக்சன் குடும்பம் நடத்தி வந்தார். அவர்களுக்கு 2019ம் ஆண்டில் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. தற்போது ஜார்ஜை விட்டு எமி பிரிந்து வேறு ஒருவரைக் காதலித்து வருகிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார் எமி ஜாக்சன். தற்போது விஜய் இயக்கி வரும் ஒரு புதிய தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகனாக அருண் விஜய் நடிக்கிறார். படத்தின் முழு படப்பிடிப்பும் லண்டனில் நடைபெறுகிறது. இதற்காக சமீபத்தில் கூட லண்டன் சென்று திரும்பியிருந்தார் அருண் விஜய்.
விஜய் கடைசியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' படத்தை இயக்கியிருந்தார். அதற்குப் பிறகு அவர் இயக்கி வரும் படம் இது. இப்படம் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.