ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து கடந்த ஜுன் மாதம் 3ம் தேதி வெளிவந்த படம் 'விக்ரம்'. இப்படம் 100 நாட்களைக் கடந்த பின்பும் கோவை கேஜி தியேட்டரில் ஓடி வந்தது. இன்று 113வது நாளுடன் இப்படத்தின் ஓட்டம் நிறைவுக்கு வருகிறது. தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் போதே, ஓடிடியில் வெளிவந்த பின்பும் ஒரு படம் 100 நாளைக் கடந்து 113 நாட்கள் ஓடியிருப்பது புதிய சாதனைதான். கோவை கேஜி தியேட்டரில் கடந்த வாரம் நடைபெற்ற 100வது நாள் விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தமிழ் சினிமா உலகில் இதுவரையில் வெளிவந்த படங்களில் அதிக லாபத்தை ஈட்டித் தந்த படம் என அப்போது பேசிய திரையுலகப் பிரமுகர்கள் தெரிவித்தார்கள். சுமார் 60 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் இருக்கும் கமல்ஹாசன் திரையுலகப் பயணத்தில் 'விக்ரம்' படத்தின் வெற்றி மறக்க முடியாத ஒன்று. இப்படம் பெற்ற வசூலை அடுத்து எந்தப் படம் முறியடிக்கப் போகிறது என்பது பெரிய கேள்விக்குறிதான்.