கதை நாயகனாக சின்னி ஜெயந்த் | சாதுவன்: ஒரே இரவில் நடக்கும் கதை | அமிதாப் பச்சன் விளம்பரத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு | விவேக் ஓபராயிடம் பண மோசடி செய்த தயாரிப்பாளர் கைது | அவதூறு மோசடி புகார்: 10 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர ஏ.ஆர்.ரஹ்மான் முடிவு | பாலியல் தொல்லை - ஈஷா குப்தா புகார் | கேரளா, தமிழ்நாடு, அஜர்பைஜான் - 3 இடங்களில் 3 முக்கிய படப்பிடிப்புகள் | ‛ரஜினி 170' துவங்கியது : புதிய தோற்றத்தில் ரஜினி | 'தங்கலான்', அதிகம் எதிர்பார்க்கும் மாளவிகா மோகனன் | 'விக்ரம், ஜெயிலர், லியோ' வரிசையில் 'ரஜினி 170' |
சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை படமாக மணிரத்னம் இயக்கி உள்ளார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான், கிஷோர், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சரித்திர படமாக உருவாகி உள்ளதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல்பாகம் செப்.,30ல் வெளியாக உள்ளது. தற்போது படத்திற்கான புரொமோஷன் பணிகள் முழுவீச்சில் துவங்கி உள்ளனர்.
சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது பேசிய மணிரத்னத்திடம் பொன்னியின் செல்வன் 2 எப்போது வரும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், இன்னும் 9 மாதங்களில் இரண்டாம் பாகம் ரிலீஸாகும் என்றார். இந்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.