இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
நடிகை மீனா தனது கணவர் வித்யாசாகரின் இறப்பு காரணமாக மிகுந்த சோகத்தில் இருந்து வருகிறார். அதனால் அவரை அதிலிருந்து மீட்டு பழைய மீனாவாக மாற்ற வேண்டுமென்ற முயற்சியில் அவரது தோழிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாகவே நேற்றைய முன்தினம் மீனாவின் 46 வது பிறந்தநாளை ஒட்டி அவரது சினிமா தோழிகள் அவருக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்கள்.
இந்த நிலையில் நடிகை ராதிகா, மீனாவை ஒரு ரெஸ்டாரண்டுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை தனது பதிவு செய்து நன்றி தெரிவித்திருக்கிறார் மீனா. அதோடு மற்றொரு பதிவில், ‛‛எனக்காக எப்போதும் சிறந்ததை மட்டுமே நினைக்கும் அழகான நண்பர்களை கொண்டிருப்பதால் என்னை மகிழ்ச்சியாக பார்க்க தங்களால் முடிந்ததை அவர்கள் செய்து வருகிறார்கள். இதற்காக எனது தோழிகள் அனைவருக்குமே நன்றி'' என்று பதிவிட்டுள்ளார் மீனா.