ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு |
பொன்னியின் செல்வனில் அருள்மொழி வர்மனாக நடித்துள்ளார் ஜெயம் ரவி. படம் வருகிற 30ம் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் நேற்று அவர் தனது ரசிகர்களை சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இப்படி ஒரு கேரக்டரில் அதுவும் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பேன் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர் ஏன் என்னை தேர்வு செய்தார் என்று இதுவரை தெரியவில்லை. அருள்மொழி வர்மன் கேரக்டரை படித்திருந்தாலும் படத்தை பொறுத்தவரையில் மணிரத்னம் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்திருக்கிறேன். நிறைய முடி வளர்த்தது, குதிரையேற்ற பயிற்சி, வாள் சண்டை பயிற்சி செய்ததுதான் நான்.
பிரமாண்ட படத்தில் நடிப்பதால் அடுத்தும் பிரமாண்ட படத்தில் நடிக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் வராது. என்னை பொறுத்தவரை பிரமாண்டம் என்பது இரண்டாவது பட்சம்தான். நல்ல படம்தான் முதல்பட்சம். கேரக்டர்களை நான் தேடிச் செல்வதில்லை. நல்ல கேரக்டர்கள் என்னை தேடி வருகிறது.
பொன்னியின் செல்வன் நன்றாக வருமா?, எம்.ஜி.ஆர், கமல் செய்ய முடியாததை மணிரத்னம் எப்படி செய்து விடுவார் என்கிற நெகட்டிவ் கமெண்டுகள் வருவதை அறிவேன். இதனை நான் வரவேற்கிறேன். காரணம் இந்த கமெண்டுகள் படம் நன்றாக வரவேண்டும் என்கிற அக்கறையில் வருவது.
எங்களுக்குமே படம் ஆரம்பிக்கும் முன்பு இந்த கருத்துதான் இருந்தது. படம் ஆரம்பித்தபிறகு மணிசாரின் உழைப்பு மற்றவர்களின் ஆர்வம் இவற்றை பார்த்த பிறகுதான் நம்பிக்கை பிறந்தது. இது தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளமாக இருக்கும்.
இவ்வாறு ஜெயம் ரவி கூறினார்.