'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
டிக் டிக் டிக், மிருதன், டெடி உள்ளிட்ட சயின்ஸ் பிக்ஷன் பேண்டசி படங்களை கொடுத்த சக்தி சவுந்தர்ராஜன் இயக்கி உள்ள கேப்டன் படம் நாளை வெளிவருகிறது. ஏலியன் சர்வைவல் திரில்லராக படம் உருவாகி உள்ளது. திங் ஸ்டூடியோவுடன் இணைந்து ஆர்யா தயாரித்துள்ளார். சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆர்யா இல்லையேல் கேப்டன் படம் இல்லை என்று இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் கூறியிருக்கிறார். இதுகுறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது: ‛‛ஒவ்வொரு படத்திற்கும் ஒரு ஆரம்ப புள்ளி இருக்கும் அந்த கணத்திலிருந்தே அதன் மொத்த பயணமும் தொடங்கும். கேப்டன் படத்தை பொறுத்தவரை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடும்படியான ஒரு படைப்பை, இது வரை பார்த்திராத விஷுவல்களுடன் புதிய ஆக்சனுடன் பிரமாண்டமாக தர வேண்டுமென்பதாக இருந்தது.
முதலில் இது சாத்தியமில்லை என்றே நினைத்தேன். ஆனால் ஆர்யா தந்த ஆதரவு எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை தந்தது. என் மீது அவர் வைத்த முழுமையான நம்பிக்கையில் தான் நான் இந்த படைப்பை உருவாக்க முடிந்தது. ஒரு படத்தின் பட்ஜெட்டை விட இயக்குநருக்கும், நடிகருக்கும் உள்ள சுமூகமான உறவால் தான் ஒரு அருமையான படம் உருவாக முடியும். அந்த வகையில் ஆர்யாவுடன் டெடி படத்தில் பணியாற்றும்போதே ஒரு சகோதரர் போன்ற உறவு உண்டாகிவிட்டது. இந்தப்படத்தில் அவரது உழைப்பும், அர்ப்பணிப்பும் அபாரமானது. ஆர்யா இல்லையேல் கேப்டன் இல்லை என்றுதான் சொல்வேன். இந்தப் படம் முன்னெப்போதிலும் இல்லாத ஒரு முழுமையான திரையரங்கு அனுபவமாக இருக்கும்'' என்றார்.