‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
பா. ரஞ்சித் இயக்கிய கபாலி, காலா போன்ற படங்களில் நடித்தவர் ரஜினிகாந்த். இந்நிலையில் தற்போது பா.ரஞ்சித் இயக்கி திரைக்கு வந்துள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்துவிட்டு பாராட்டிருக்கிறார் ரஜினி. அவர் கூறுகையில், நீங்கள் இதுவரை இயக்கியதில் மிகவும் சிறந்த படம் நட்சத்திரம் நகர்கிறது. நடிகர்கள், இசை, ஒலிப்பதிவு, கலை இயக்கம் என அனைத்தும் சிறப்பாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்ததால் இந்த படத்தை ரசித்து பார்த்தேன். என்னுடைய ஆரம்ப கால நாடக வாழ்க்கையை இந்த படம் ஞாபகப்படுத்தியது. ஒரு நாடக நடிகராக என்னால் இந்த படத்தில் எளிதாக ஒன்றிப் போக முடிந்தது என்று தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். இதையடுத்து பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இந்த பாராட்டு என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது. நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்துவிட்டு உங்களது சிறந்த படைப்பு என்று மேற்கோள் காட்டியதற்கு மிக்க நன்றி என பதிவிட்டுள்ளார்.