'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சின்னத்திரையில் டாப் நடிகை என பெயரெடுத்த ரச்சிதா மஹாலெட்சுமி தற்போது கலர்ஸ் தமிழ் டிவியில் 'இது சொல்ல மறந்த கதை' என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது ரச்சிதா திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படமும் வீடியோவும் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதையடுத்து ரக்சிதாவுக்கு விவாகரத்து நடந்துவிட்டதாகவும் இரண்டாவது திருமணத்தை ரகசியமாக செய்து கொண்டதாகவும் செய்திகள் பரவின.
இதை பார்த்து கடுப்பான ரச்சிதா, திருமண கோலத்தில் இருக்கும் அந்த வீடியோவை ஷேர் செய்து, அது தான் நடித்து வரும் 'இது சொல்ல மறந்த கதை' தொடரில் இடம் பெற்றுள்ள காட்சி என விளக்கமளித்துள்ளார். மேலும், இந்த வீடியோவை வைத்து தவறான முறையில் வதந்திகளை பரப்பி வருபவர்களையும் கடுமையாக சாடியுள்ளார். ரச்சிதா அந்த பதிவில், 'இது வச்சு பொய்யான நியூஸ்லாம் பரப்ப வேண்டாம். நீங்க அட்டென்ஷன் கிரியேட் பன்றதுக்கு, நீங்க பணம் பன்றதுக்கு, உங்க போதைக்கு எங்கள (நடிகைகள) ஊறுகாய் ஆக்காதீங்க . எங்க பொழப்ப எங்கள நிம்மதியா பாக்க விடுங்க' என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.