'மகாராஜ்' படத்தில் சர்ச்சை காட்சியில் நடித்தது ஏன்: ஷாலினி பாண்டே விளக்கம் | தனுஷ் ஒரு மிகச் சிறந்த மனிதர்! - சொல்கிறார் ரோபோ சங்கர் | 45வது படத்தில் வக்கீலாக நடிக்கும் சூர்யா! | டிச.,18ல் ஓடிடியில் வெளியாகும் ‛கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ்' | இயக்குனர் கே. எஸ். ரவிக்குமாரின் தாயார் மரணம்! | விடாமுயற்சி டப்பிங் பணிகளை தொடங்கிய அஜித்குமார்! | ரஜினி பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் திருமணம்! | கூலி படத்தில் இணைந்த ரெபா மோனிகா ஜான், சந்தீப் கிஷன் | பாலிவுட்டில் அறிமுகமாகும் பஹத் பாசில் | 4கே-வில் ரீ-ரிலீஸ் ஆகும் வேலையில்லா பட்டதாரி தெலுங்கு பதிப்பு |
ஒவ்வொரு படத்திற்கும் அதன் வெளியீட்டுத் தேதி மிக முக்கியம். போட்டிக்கு எந்தெந்த படங்கள் வருகிறது, படம் வெளியாகும் காலம் எப்படி என பல கணக்குகள் இருக்கிறது. நல்ல கதையம்சம் உள்ள, சரியாக எடுக்கப்பட்ட படங்கள் எந்த சூழ்நிலையில் வெளியானாலும் வரவேற்பைப் பெற்றுவிடும்.
ஆனால், படத்தைப் பார்த்து மற்றவர்கள் என்ன கருத்து சொல்கிறார்கள், என்ன மாதிரியான விமர்சனங்கள் வருகிறது என்பதைப் பார்த்து தேர்வு செய்து படங்களுக்குச் செல்லும் ரசிகர்களுக்கான படங்களைத் தருபவர்களுக்கு அந்த சூழ்நிலை மிக முக்கியம்.
இந்த வருட விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 31ம் தேதி வார நடுவில் புதன் கிழமை வந்தது. அன்றைய தினத்தில் விக்ரம் நடித்த 'கோப்ரா', பா ரஞ்சித் இயக்கிய 'நட்சத்திரம் நகர்கிறது' படங்கள் வெளிவந்தன. இரண்டு படங்களுக்குமே கலவையான விமர்சனங்கள் வெளிவந்தன. இந்த இரண்டு படங்களும் நேற்று வெள்ளிக்கிழமை வந்திருந்தால் இன்றும், நாளையும் வார விடுமுறை நாட்களுக்கும் சேர்த்து ரசிகர்களால் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டு இருந்திருக்கும். இரண்டு படங்களுக்குமே வெளியீட்டிற்கு முன்பாக ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
புதன் கிழமை படங்களை வெளியிட்டதால், இடையில் இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறதே என சனி, ஞாயிறுக்காக அதிக அளவில் யாரும் முன்னரே முன்பதிவு செய்யவில்லை. 'கோப்ரா' படத்திற்கு படம் வெளியான அன்று அதிகாலை காட்சி முதற்கொண்டு அன்றைய தினக் காட்சிகள் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. அன்றைய தினம் படத்தின் நீளம் அதிகம் என பொதுவான விமர்சனம் வந்ததால் மேற்கொண்டு அதிகமான முன்பதிவு நடக்கவில்லை. மறுநாள் 20 நிமிடங்களை குறைத்ததற்குப் பதிலாக அதை பட வெளியீட்டிற்கு முன்பே குறைத்திருந்தால் இப்படி ஒரு விமர்சனமோ, கருத்துக்களோ வந்ததைத் தவிர்த்திருக்கலாம்.
'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை ரசிகர்களிடம் சரியாகக் கொண்டு போய் சேர்க்கவில்லை என்பதும், அந்தப் படம் கலைப் படம் வரிசையில் பார்க்கப்பட்டதும் படத்திற்கான குறையாகப் போய்விட்டது. இந்த இரண்டு படங்களின் தவறான வெளியீடு, அவற்றிற்கான விமர்சனங்கள், கருத்துக்கள் ஆகியவற்றை அடுத்து படங்களை வெளியிட உள்ளவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என கோலிவுட்டில் நாம் விசாரித்தவர்கள் அவர்களது அனுபவங்களாகப் பகிர்ந்து கொண்டார்கள்.