2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

விக்ரம் நடித்து வெளியான ஸ்கெட்ச், சாமி ஸ்கொயர், கடாரம் கொண்டான் , மகான் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்து வெளியான கோப்ரா படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்தார் விக்ரம். விநாயகர் சதுர்த்திக்கு வெளியான இந்த படம் நான்கு மொழிகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக படத்தின் நீளம் அதிகமாக கருத்துக்களை எழுந்ததை அடுத்து படத்தின் நீளத்தில் 20 நிமிடத்தை கத்தரித்தார்கள். ஆனபோதிலும் கோப்ரா படத்தின் வசூல் எகிறவில்லை.
பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் 9 கோடி வசூலித்த கோப்ரா படம், அதற்கு அடுத்த இரண்டு நாள்களும் வசூல் குறைந்தது. காரணம் வார வேலை நாட்கள் என்பதால் வசூல் பெரிதாக இல்லை. இப்படி படிப்படியாக கோப்ரா படத்தின் வசூல் குறைந்து விட்டதால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஓரளவு வசூலித்தால் மட்டுமே இந்த படம் பெரும் சரிவிலிருந்து தப்பிக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படி பல கெட்டப்புகளில் கடுமையாக உழைத்து வெளியான படமும் பெரிய அளவில் போகாததால் விக்ரம் சற்று அப்செட்டில் இருக்கிறாராம். அதோடு, அடுத்தபடியாக வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் கண்டிப்பாக வெற்றி படமாக அமையும் என்ற நம்பிக்கையில் அவர் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.