புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

இன்றைய காலகட்டத்தில் நடிகர்கள் சினிமா வருமானத்தை மட்டும் நம்பியிராமல் வேறு தொழிலும் செய்கிறார்கள். அதில் ஒன்று ஓட்டல் நடத்துவது, ஆர்யாவும், சூரியும் தற்போது ஓட்டல்களை நடத்தி வருகிறார்கள். கருணாஸ் சில காலம் நடத்தினார். ஆனால் முதன் முதலாக ஓட்டல் நடத்திய நடிகர் ஏ.கருணாநிதி.
அந்தக் காலத்தில் நடிகர்கள் அதிகம் பணம் சம்பாதித்தால் தியேட்டர் கட்டுவார்கள், இல்லாவிட்டால் படம் தயாரிப்பார்கள். ஆனால் முதன் முதலில் ஓட்டல் வைத்தவர் கருணாநிதி. சென்னை தியாகராய நகரில் 'மாமியார் ஓட்டல்' என்ற பெயரில் நடத்தினார். அன்றைக்கு சென்னையில் உள்ள புகழ்பெற்ற அசைவ ஓட்டல்களில் ஒன்றாக இருந்தது. நடிக்காத நாட்களில் தானே ஓட்டலுக்கு சென்று பணியாற்றுவார். இதற்காகவே அந்த ஓட்டலில் கூட்டம் கூடிய நாட்களும் உண்டு.
காளி என்.ரத்னம் என்ற நடிகர்தான் முதல் முதலில் பாடி லேங்குவேஜ் எனப்படும், உடல்மொழி காமெடியை கொண்டு வந்தார். அவருக்கு பிறகு ஏ.கருணாநிதிதான் உடல்மொழி காமெடி செய்தார். 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் அரண்மனை சமையல்காரன் வேடத்தில் நடித்தார். அவரது நடிப்பை பார்த்து வியந்த இயக்குனர் பந்துலு அவரது கேரக்டரை ஒற்றனாக மாற்றி பல காட்சிகளை வைத்தார். இதே போன்று 'அதே கண்கள்' படத்திலும் மலையாள சமையல்காரனாக நடித்து மலையாளம் கலந்த தமிழ் பேசினார். டி.பி.முத்துலட்சுமிக்கு ஜோடியாக அதிகமான படங்களில் நடித்தார்.




